தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.


*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் காலமானார். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.



*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28, 864 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 404 என்ற அளவில் பதிவாகிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 493 நபர்கள் உயிரிழந்துள்ளனர்


*பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது.  


*சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 417, 376, 313, 323, 506(I), 67A ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



 


*கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுபெற்று, கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகையால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.


*தமிழ்நாட்டில்  கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  


*கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டிற்குள் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.


*ஜூன் மாதத்திற்கு  இந்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு 6.09 கோடி கொரோனா தடுப்பூசியின் டோஸ்கள் (கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின்), வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.  கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்துக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 5. 86 கோடி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும்.  எனவே, ஒட்டு மொத்தமாக ஜூன் மாதத்திற்கு 11,95,70,000 கோடி தடுப்பூசிகள் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.     


*ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பதை ஏற்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கு கே.எஸ்.அழகரி ஆதரவு தெரிவித்துள்ளார்.


மேலும் வாசிக்க: 


Chennai Corporation Grocery Shops Details



ADMK Manikandan on Shanthini Case | கைதாகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ? - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு 


கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனா தொற்றால் காலமானார் 


 


ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு விவகாரம் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கே.எஸ்.அழகிரி ஆதரவு