கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியில் மற்றும் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், உள்துறை உள்ளிட்ட துறைகளை கவனிப்பார்.
2. நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன்,
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே என் நேரு,
கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ பெரியசாமி,
உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி,
பொதுப் பணித்துறை அமைச்சராக எ வ வேலு,
வேளாண் துறை அமைச்சராக எம் ஆர் கே பன்னீர்செல்வம்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மா சுப்ரமணியன்
நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன்,
மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக திரு செந்தில் பாலாஜி , உள்ளிட்ட 34 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
3.. கோவிட்-19க்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுனார். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
4,. மாநிலத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.
5. கொரோனா தடுப்பூசிக்கு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (டிரிப்ஸ்) தள்ளுபடிக்கு அமெரிக்கா பைடன் நிர்வாகம் ஆதரவு அளித்ததை இந்தியா வரவேற்றுள்ளது.
6. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 14,974 ஆக அதிகரித்தது.
7.. கேரளாவில் நாளை முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் அதிகரித்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
8. நாடுமுழுவதும் இதுவரை 16,25,13,339 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 மாநிலங்களில் 18-44 வயதில் 9,04,263 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 18-44 வயதில் 6,415 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
9. முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
10. நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கோவிட் -19 காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
மேலும் இது போன்ற செய்திகளை சுருக்கமாக தெளிவாக தொடர்ந்த ABP நாடு இணையதளத்துடன் இணைந்திருங்கள்!