”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் MLA ஜாபர் ஹுசைன் சீறி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் மலை பெய்து வரும் நிலையில், ஹைதராபாத்தின் ஒரு பகுதியாக இருக்கும் யாகுத்புரா தொகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஜாபர் ஹுசைனிடம் நேரடியாக பலமுறை புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து மழைநீர் தேங்கி இருக்கும் ஒரு பகுதியில் MLA ஜாபர் ஹூசேன் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மழை வரும் ஒவ்வொறு முறையும் உங்களிடம் நேரில் புகார் கொடுத்தோம். ஆனா நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல, கண்டுக்கவும் இல்ல. இப்ப ஆய்வு என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்திருக்கிறீங்களா என கோபத்துடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜாபர் ஹூசேனை தள்ளிவிட்டு தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதன் வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola