Breaking News: திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை - பிரதமர் மோடி வாழ்த்து செய்தி
இன்றறைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை உடனடியாக இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி வாழ்த்து செய்தி, "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்".
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
2022 உ.பி சட்டபேரவைத் தேர்தலில், கோராக்பூர் தொகுதியில் யோகி ஆதித்தியநாத் போட்டியிடுவதாக பாஜக அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை கட்டிய ஜான் ஜான்பென்னிகுயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார் .
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 16.6 சதவீதமாக அதிகரிப்பு.
பாலமேடு ஜல்லிக்கட்டு திருவிழா-2022: முதல் சுற்று முடிவில் (1st Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்காவில், ஒமிக்ரான் தொற்று பரவலால் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் இதுவரை கூறுகள்/ பாகங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. முதன் முறையாக, ஒட்டுமொத்த ஏவுகணை தளவாடங்களையும் இந்திய தற்போது ஏற்றுமதி செய்ய உள்ளது.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி மேற்கொள்ளப்படுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இம்மாதம் 21ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,64,202 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 1,09,345 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,72,073 ஆக அதிகரித்துள்ளது.
புதிய தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10,30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார்.
நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை இயக்குவதன் மூலம் தேசிய தேவைகளுக்கு புதிய தொழில்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை புரிந்துகொள்வது இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
Background
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த விழாவினை மாநில அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதிவரை முதல்கட்டமாகவும், மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதிவரை இரண்டாம் கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -