Breaking News LIVE: கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Breaking News LIVE Tamil: சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 16 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் நாளை மிக கனமழை பெய்யலாம் -
வளிமண்டல மேலடுக்கு சூழற்சியால் தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய மோடி,பாபா சாஹேப் அம்பேத்கர் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களை நினைவுகூர இன்றைய தினம் உகந்தது என கூறினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 வது நாளாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தொடர் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் சாசனத்தை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும்
அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை நாம் எப்போதும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்
யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். அன்புக் குழந்தைகளே, ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளில் தெரிவித்தார்.
திருப்பூரில் 4 லட்சம் மக்களுக்கு வாழ்வளித்து வந்த பின்னலாடைத் தொழில் நூல் விலை உயர்வால் கடும் பாதிப்படைந்துள்ளது. மேலும் அது 5.63 லட்சம் விசைத்தறி,1.89 லட்சம் கைத்தறி தொழிலையும் பாதித்துள்ளது.
ஒன்றிய அரசே, நூல்விலையை கட்டுப்படுத்தி பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை குறைந்து வருகிறது. கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-50 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து கொள்ள மாநில உயர் கல்வித் துறை அனுமதித்துள்ளது.
இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் "தேசிய பால் தினத்தை" கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இன்று சிறப்பாக கொண்டாடுகிறது.
தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, இந்தியா கொண்டாடி வருகிறது.
75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ விழாவைக் கொண்டாடும் வகையில் அரசியலமைப்பு தினத்தை நாளை நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது. உள்ளோம். குடியரசுத் தலைவர் காலை 11 மணிக்கு இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
குடியரசு துணைத் தலைவர், மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு மக்களவைத்தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
குடியரசுத் தலைவரின் உரைக்குப்,பின் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது.
Background
Tamil Nadu Breaking News LIVE Updates:
மேற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை அபாயம் காரணமாக சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -