News Today LIVE | டெல்லி இந்திய கேட்  பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் - பிரதமர் மோடி

இன்றைய தினத்தின் முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்

ABP NADU Last Updated: 21 Jan 2022 01:31 PM
டெல்லி இந்திய கேட்  பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் - பிரதமர் மோடி

டெல்லி இந்திய கேட்  பகுதியில் கிரானைட்டால் ஆன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


முன்னதாக, குஜராத் மாநிலம் சோம்நாத் ஆலயத்தின் அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்




இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 


 

மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசுதான் - முதல்வர் ஸ்டாலின்

மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசுதான் - முதல்வர் ஸ்டாலின்

மீனாட்சியம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் குடமுழுக்கு - முதல்வர் ஸ்டாலின்

 மீனாட்சியம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் குடமுழுக்கு - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கட்டுபடுத்தாவிட்டால் அமைதி சீர்குலையும் - ரவிக்குமார் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரைக் கட்டுபடுத்தாவிட்டால் அமைதி சீர்குலையும். சட்டம் ஒழுங்கு கெடும். 2017 இல் இந்திய சட்ட ஆணையம் தயாரித்தளித்த மசோதாவை சட்டமாக்கத் தமிழ்நாடு அரசு 
முன்வரவேண்டும் என விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

India Omicron Cases So far: இதுவரை மொத்தம் 9,692 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

இதுவரை மொத்தம் 9,692 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இது நேற்றை விட 4.36%  அதிகமாகும். தினசரி பாதிப்பு விகிதம் (Daily positivity Rate) 17.94 சதவிகிதமாக உள்ளது.


 

India 3.47 lakh new cases: கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய நாளை விட, 29,722 எண்ணிக்கை இது கூடுதலாகும். 

கொரோனா தடுப்பூசியால் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது - மத்திய அரசு

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரஷாந்த் பூஷன்,"மூன்றாவது அலையில், நாட்டின் இறப்பு விகிதத்தில் தொடர் வீழ்ச்சியைக் காணலாம். தற்போது இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு கொரோனா தடுப்பூசி தான் முக்கிய காரணமாகும். 


2021, ஏப்ரல் 30 அன்று,3,86,452 பேர் கொரோனா நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அப்போது, முழு தவணை தடுப்பூசி செலுத்தக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 3% ஆகும். 2022, ஜனவரி 20 அன்று நாட்டின் புதிய பாதிப்புகள்  3,17,532 ஆக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை வெறும் 380 ஆகும். நாட்டில், 72% பேர் இரண்டு கட்ட தவணை செலுத்திக் கொண்டால் இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.                           

மருத்துவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - ஓபிஎஸ்

கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரலாம்

இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிப்பகிர்வின் முன் தவணையாக மாநில அரசுகளுக்கு ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்

வரிப்பகிர்வின் முன் தவணையாக மாநில அரசுகளுக்கு ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இது, ஜனவரி 2022 மாதத்திற்கு விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் மாநில அரசுகள் இதுவரை மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன, அல்லது 2022 ஜனவரி மாதத்திற்குரிய வரவுகளை விட இருமடங்கு அதிகமாகும். மாநில வாரியான நிதி பகிர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாத தவணையாக 1939 கோடியே 19 லட்சம் ரூபாயும் முன் தவணையாக 1939 கோடியே 19 லட்சம் என மொத்தம் 3,878 கோடியே 38 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக  பரிசோதிக்கப்பட்டது

மேம்படுத்தப்பட்ட செயல் திறனுடன் உள்நாட்டு கருவிகள் அதிகளவில் பொருத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து நேற்று (20.01.2022)  காலை 10.30 மணியளவில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக  பரிசோதிக்கப்பட்டது

Background

அஇஅதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு கே பி அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.


சோதனையில் பல்வேறு பொருள்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் இரண்டு கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய், சுமார் 6.63 கிலோ தங்க நகைகள், 13.8 5 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.2.65 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 


இதற்கிடையே, அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக திமுக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அஇஅதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.