Breaking Live: இந்த புனித தினம் அனைவருக்கும் மகிழ்ச்சியை வழிகாட்டும் - நரேந்திர மோடி வாழ்த்து

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 10 Sep 2021 01:01 PM
நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன், இந்த புனித தினம் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,614 ஆக அதிகரித்துள்ளது.  குணடைந்தோர் வீதம் தற்போது 97.48 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,681 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக அதிகரித்துள்ளது.


 

இந்தியாவில் வசிக்கும் சக குடி மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் - குடியரசுத் தலைவர்

விநாயகர் சதுர்த்தி என்ற நன்னாளில் இந்தியாவில் வசிக்கும் சக குடி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். 

Tamil Nadu New Governor: வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் - புதிய ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பண்டிகை காலங்களில் கொரோனா விதிமுறையை பின்பற்றி கவனமாக இருப்பது அவசியம்: டாக்டர் என்.கே. அரோரா

நம் நாட்டில் கடந்த பல வாரங்களாக தினமும் 30,000-45,000 பாதிப்புகள் சராசரியாக பதிவாகின்றன. குறிப்பாக கேரளா பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்கள் மற்றும் ஒரு சில தென் மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய சார்ஸ்-கோவ்-2 தொற்றுகளின் மரபணுவை ஆராய்ந்தபோது ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய வகைகள் உருவாகவில்லை. இரண்டாவது அலையின் இறுதி கட்டமாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


எனவே கொவிட் சரியான நடத்தை விதி முறையை பின்பற்றுவது, குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். இந்தக் காலத்தில் புதிய உருமாறும் தொற்று உருவாவதும் மூன்றாவது அலை ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், கோவிட்- 19 செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். 

Background

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31- வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.