Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்காவிட்டால் ஹமாஸின் கதையை முடிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஹமாஸ் அதற்கு என்ன பதில் அளித்துள்ளது தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்து, பதிவு ஒன்றை போட்டார். அதற்கு சற்றும் அசராத ஹமாஸ் அமைப்பு, அவருக்கு என்ன பதில் கொடுத்திருக்கிறது தெரியுமா.? பார்க்கலாம்.
ஹமாஸ் அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ஹமாஸ் அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்ட பதிவில், பிணைக் கைதிகளை உடனே விடுவியுங்கள், பின்னர் அல்ல, அப்படியே நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களையும் ஒப்படையுங்கள், இல்லையென்றால் உங்கள் கதை முடிந்துவிடும் என கூறியுள்ளார். மனநிலை சரியில்லாதவர்கள்தான் உடல்களை வைத்திருப்பார்கள், நீங்கள் அப்படிப்பட்டவர்கள்தான், உங்கள் கதையை முடிக்க, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்தையும் நாங்க வழங்கப் போகிறேன், நான் சொல்லும்படி செய்யாவிட்டால், ஹமாஸில் இருக்கும் ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் என எச்சரித்துள்ளார்.
Just In




மேலும், இதுதான் ஹமாஸ் தலைவருக்கு கடைசி எச்சரிக்கை, வாய்ப்பு இருக்கும்போதே காசாவை விட்டு நீங்கள் வெளியேறும் நேரம் இதுதான் என்று மிரட்டியுள்ளார். காசா மக்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது.. ஆனால் நீங்கள் பிணைக் கைதிகளை வைத்திருந்தால் அது நடக்காது... அப்படி நீங்கள் செய்தால் செத்தீர்கள் என்று கூறியுள்ளார். சிந்தித்து முடிவெடுங்கள்.. பிணைக் கைதிகளை உடனே விடுவியுங்கள், அல்லது பயங்கரமான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று தனது பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ஹமாஸ் கொடுத்த பதில் என்ன .?
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டலை புறந்தள்ளிய ஹமாஸ் அமைப்பு, காசா பகுதியில் நிரந்தரமாக போரை நிறுத்தினால் தான், இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க முடியும் என்று கூறியுள்ளது. ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனவரி மாதம் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயற்சிப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில், இரண்டாம் கட்டமாக இருதரப்பிலும் பிணைக் கைதிகளை விடுவிப்பது, நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப்பெறுவது ஆகியவை இடம்பெற்றிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒப்பந்தத்தை பின்பற்றி பேச்சுவார்த்தை நடத்தி பிணைக் கைதிகளை விடுவிப்பதே சிறந்தது எனவும், அந்த பேச்சுவாத்தை பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெற இருந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை குறைந்தபட்ச பேச்சுவாத்த்தை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்தல் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!