Breaking News Live: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது...

இன்றைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 20 Jan 2022 10:25 AM
கொரோனா தொற்றால் ஒரேநாளில் 491 பேர் பலி..

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 491 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது...

இந்தியாவில் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கே.பி. அன்பழகனின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை..

கே.பி. அன்பழகன் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சோதனை நடைபெறும் இடங்கள்..

தருமபுரியில் 41 இடங்கள், சேலம், சென்னை, தெலுங்கானா மாவட்டம் கரீம் நகரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

தருமபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை..

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை கோபாலபுரத்தில் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

சோதனையிடப்படும் 6வது முன்னாள் அமைச்சர் அன்பழகன்...

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையால் சோதனையிடப்படும் 6வது முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆவார். இதற்கு முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட்டனர்.

கே.பி.அன்பழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு...

வருமானத்தை விட ரூ. 11.32 கோடி சொத்து குவித்ததாக 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கே.பி.அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு..

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி மீது வழக்கு பதிவாகியுள்ளது. 

57 இடங்களில் சோதனை..

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையால் சோதனையிடப்படும் 6வது நபர் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன். இவருக்கு சொந்தமான தருமபுரி, சென்னை உள்ளிட்ட 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

Background

அதிமுக முன்னாள் அமைச்சர்  கே.பி. அன்பழகன் வீடு உள்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.