News Today LIVE: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
இன்றைய தினத்தின் அனைத்து முக்கியச் செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜனவரி 2ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை. டிசம்பர் 31 -ஆம் தேதியன்று இரவு 10 மணிமுதல் 1 மணிவரை மதுபான விற்பனைக்கு தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் : டூவீலருக்கு பெட்ரோல் விலை ரூபாய்.25 குறைப்பு. ஜனவரி 26 முதல் இது அமலுக்கு வரும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான்.. 45-ஆக உயர்ந்த உயர்ந்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி கொடி ஏற்றிய போது அவிழ்ந்து விழுந்த காங்கிரஸ் கட்சி கொடி
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி கொடி ஏற்றிய போது அவிழ்ந்து விழுந்த காங்கிரஸ் கட்சி கொடி
மருத்துவர்கள் மீதான அத்துமீறலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "பூ தூவியது விளம்பரத்திற்கு, உண்மையில் அநீதிதான் தூவப் படுகிறது. மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, நான் எப்போதும் கோவிட் போராளிகளுடன் துணை நிற்பேன்" என்று பதிவிட்டார்.
Background
ஐதராபாத்தை சேர்ந்த பயோலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நானோ துகள் தடுப்பூசியான கோவோவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கும், மால்நுபிரவிர் என்ற மாத்திரைக்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்றை அமைச்சர் தெரிவித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -