Trending
Flights to Vellore, Neyveli: வேலூர், நெய்வேலிக்கு இனிமே பறக்கலாம்... வெளியான குட் நியூஸ்...
வேலூர் மற்றும் நெய்வேலிக்கு சீக்கிரமே பறந்து போகலாம். ஆமாங்க, அந்த இடங்கள்ல விரைவில் விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரப் போறதா மத்திய இணை அமைச்சர் சொல்லியிருக்கார்.

வேலூர், நெய்வேலியில விரைவில் விமான சேவை தொடங்கப்படும்னு, நாடாளுமன்றத்துல, தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி கேட்ட கேள்விக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் சொல்லியிருக்கார்.
எம்.பி கனிமொழி சோமு கேள்வி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துட்டு வர்ற நிலையில, மாநிலங்களவைல, திமுக எம்.பி கனிமொழி சோமு ஒரு கேள்வி எழுப்பியிருந்தாங்க. அதாவது, உதான் திட்டத்தின் கீழ, தமிழ்நாட்டுல நடந்துட்டு இருக்கற விமான நிலைய பணிகள் என்னென்னன்னு அவங்க கேள்வி எழுப்பியிருந்தாங்க. அதுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர் மொஹல் எழுத்துப்பூர்வமா பதில் கொடுத்துருக்கார்.
தமிழ்நாட்டில் விமான நிலையங்கள் அமைக்க 5 இடங்கள் தேர்வு
மத்திய இணை அமைச்சர் கொடுத்துருக்கற பதில்ல, விமான சேவை மூலமா மண்டலங்கள இணைக்குற உதான் திட்டத்தின் கீழ, விமானங்கள இயக்குறதுக்கும், மேம்படுத்துறதுக்கும், தமிழ்நாட்டுல சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுருக்கறதா சொல்லியிருக்கார்.
வேலூர், நெய்வேலியிலிருந்து விரைவில் விமான சேவை
அதுல, சேலத்துல ஏற்கனவே விமான சேவை தொடங்கிட்ட நிலையில, வேலூர்லயும், நெய்வேலிலயும் விமான நிலைய பணிகள் நிறைவடைஞ்சுட்டதாக சொல்லியிருக்கார். அந்த விமான நிலையங்களுக்கு லைசென்ஸ் பெறும் வேலைகள் நடந்துட்டு வர்றதால, விரைவுல அங்க இருந்து விமானங்கள் இயக்கப்படும்னு மத்திய இணையமைச்சர் தெரிவிச்சுருக்கார்.
மேலும், தஞ்சாவூர்ல விமான நிலையத்துக்கான அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையம் கிட்ட ஒப்படைக்கப்பட்டதும், கட்டுமாணப் பணிகள் தொடங்கும்னு தெரிவிக்கப்பட்டுருக்கு. அதோட, ராமநாதபுரத்துல விமான நிலையம் அமைக்க தேவையான இடத்த கையகப்படுத்துற பணியில தமிழ்நாடு அரசு ஈடுபட்டுருக்கறதா சொல்லியிருக்கார்.
இது இல்லாம, தமிழ்நாட்டுல அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்கள்ல, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பயன்படுத்தாம இருக்கற விமான ஓடுதளங்கள சீர்படுத்தி, அவைகள உதான் திட்டத்தின் கீழ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்போறதாகவும், மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹல் தன்னோட எழுத்துப்பூர்வமான பதில்ல தெரிவிச்சுருக்கார்.