Breaking News LIVE: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்

Breaking News LIVE Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

ABP NADU Last Updated: 24 Nov 2021 03:05 PM
மழை வெள்ள பாதிப்பு - ரூ.4,625.80 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை

தமிழ்நாட்டில் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.4,625.80 கோடி ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை



 



மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,070.92 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.3,554.88 கோடியும் தேவை



 

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்


அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் வழிநடத்த வேண்டும் - செங்கோட்டையன்


கருணை அடிப்படையில் பணிகள் வழங்க முன்னுரிமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்க முன்னுரிமை 


தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அண்மையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அண்மையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்

எகிறும் தக்காளி விலை!


அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா


சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டி தீர்மானம் கொண்டு வரவேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

1. சமூகநீதியை நிலைநாட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை!


2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பல பத்தாண்டுகளாக  வலியுறுத்தி வருகிறோம்.  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு  தவிர்க்க முடியாதது!


3. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சாதிவாரி  மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!


 

பிற்பகல் 3.30 மணிக்கு சுப்ரமணியன் சுவாமி - மம்தா பேனர்ஜி சந்திப்பு

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமியை மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சந்தித்துப் பேசுகிறார். டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.         

Tamilnadu Weather: எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர்  மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் கொலை மிரட்டல் - கவுதம் கம்பீர் அதிரடிப் புகார்

ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக எம்பி கவுதம் கம்பீர் டெல்லி காவல்துரையிடம் புகார் அளித்துள்ளார். 

துணி நூலிற்கான விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

துணி நூலிற்கான விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். 


இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப் பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்; மூலப் பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும்; நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.  


 


 

வெளிநாட்டு மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி டோஸ் கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்குள் வரும் அனைவரும் இரண்டு தவணை டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.


 


Mettur Dam | மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக 30,500 கன அடி தண்ணீர் திறப்பு..

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக நீடித்து வருகிறது.


 

குடியரசுத் தலைவர்  ராம் நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலத்துக்கு பயணம்

குடியரசுத் தலைவர்  ராம் நாத் கோவிந்த் இன்றும், நாளையும் உத்தரப் பிரதேசத்துக்கு (கான்பூர்) பயணம் மேற்கொள்கிறார்.


இன்று, சௌத்ரி ஹா்மோகன் சிங் யாதவின் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை  ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முளுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 437 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 10,949 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Taminadu weather: மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் நாளை  (நவம்பர் 25) முதல் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 26, 27ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லமான வேதா நிலையத்தை  அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.   


மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த குடியிருப்பான வேதா நிலையம் இல்லத்தினை நினைவுச் சின்னமாக மாற்றப்படும் என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690/-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதா குடியிருப்பு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர  நீதிமன்றத்தைநாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

Background

Breaking News LIVE Tamil: 


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடம் எதற்கு? நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95 கோடி இழப்பீடு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.