Breaking News LIVE : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் இருந்த அணியின் பிசியோதெரபி நிபுணர், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 70 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 36,385 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தவர்களின் மொத்த விழுக்காடு, 97.43 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எல். மீனாம்பிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கோவை மாநகராட்சி பகுதியில் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி.கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு,தொண்டை அறுக்கப்பட்டு,அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.
இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார்.அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.
பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மடுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும்,வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும்.சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்கவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்று கரூர் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்கு தடையின்றி வழங்கி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அடைவதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிகை குறித்து பதினோரு வடகிழக்கு மற்றும் மலையோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், ஜம்மு & காஷ்மீர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் மாநில சுகாதாரச் செயாலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ்களையும் வழங்குவதில், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லயென்றும், இந்த பிரிவினருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இதன் மீது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
Background
Latest News in Tamil Today LIVE Updates:
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் மனீஷ் நார்வால் என்பவரும், பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் என்பவரும் தக்கப்பதக்கம் வென்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -