Governor R.N. Ravi: போதைப் பொருள் பழக்கம் எதிர்கால சந்ததியை அழித்துவிடும் - ஆளுநர் ரவி வேதனை
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள் அழித்துவிடும். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் நுழையாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் மேலும் படிக்க
Erode Temple: ஈரோடு கோயிலில் ரூபாய் 20 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை! காரணம் என்ன?
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நடந்த ஏலத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூபாய் 20 ஆயிரத்துக்கு ஏலம் போயியுள்ளது. ஈரோடு நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் சிவகிரி கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள பழபூசையன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மஹாசிவராத்திரி விழாவையொட்டி சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட எலுமிச்சை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம் ஆண்டு தோறும் நடைபெறும். மேலும் படிக்க
- PM Modi: வரும் 15 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை!...இந்த முறை எங்கு?
பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 15ம் தேதி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த முறை சேலத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி
சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் மத்திய சிறையில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விவேகானந்தன் குளிக்கும் சோப் சாப்பிடுவது, மூக்கை மூடி கொள்வது, சட்டையால் முகத்தை மூடி கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக்கொண்டு தற்கொலை முயற்சி உள்ளிட்டவை மூலம் தற்கொலை முயற்சி செய்து வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் மேலும் படிக்க
- CM M.K.Stalin Speech: தேர்தல் நேரத்தில் பொங்கும் பாசம்.. வெறுங்கை முழம்.. பிரதமர் மோடியை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி -தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று சொல்லி இருக்குறார் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார். மேலும் படிக்க