போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள் அழித்துவிடும். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் நுழையாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


 






 


சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளது நமது மாநிலத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தில் உள்ளதை உறுதிப் படுத்தியுள்ளது. 


மத்திய உளவுத்துறை,புலனாய்வுத் துறையினர்,சர்வதேச கடத்தல் கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையில், நமது மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்துள்ளது.  இந்த போதைப்பொருள்கள் மிகவும் அடிமையாக்கும் தன்மையையும் அந்த பழக்கத்திற்கு ஆளானவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். இதனைத் தடுக்கவில்லை என்றால் நமது இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். போதைப்பொருளுக்கு அடிமையாவதன் மூலம் கொடூரமான குற்றங்களைச் செய்யவும் அது வழிவகுக்கும். 


மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள், தங்கள் பணிகளை செய்துவந்தாலும், நம் மாநிலத்தில் உள்ள பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் முதன்மை இலக்கு இளைஞர்கள்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனரா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். 


இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான். தயவு செய்து இதுபோன்ற வாழ்க்கையை பாலாக்கும் செயல்களில் இருந்து விலகி இருங்கள். இந்த போதைப்பழக்கம் உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் நம்பமுடியாத அளவுக்கு அழித்துவிடும்” என தெரிவித்துள்ளார்.