TN Corona LIVE Updates: தமிழ்நாட்டில், 17000 தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
TN Corona Cases LIVE Updates: தனக்கு அறிகுறியற்ற கொரோனா என்றும், கோவிட்- 19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் அசோக் கெலாட் ட்விட்டரில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 17,000 தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு அறிகுறியற்ற கொரோனா என்றும், கோவிட்- 19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மாநில அரசுகளுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் 57 லட்சத்திற்கும் கூடுதலான டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,645 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 2.69 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களிடையே அவ நம்பிக்கை ஏற்படும் வகையில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கோவிட்19 தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் முழுஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதி அமலில் இருக்கும் என்று அரசு நிர்வாகம் தெரிவித்தது.
பாஜக முன்னாள் ஜார்கண்ட் மாநிலத் தலைவர் லக்ஷ்மன் கிலுவா இன்று அதிகாலை கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
புதுச்சேரியில் 84 தேர்தல் முகவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வரிசையில் நிற்கத் தொடங்கினர். கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகைய்யிடத் தொடங்கினர்.
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேற்கூறிய மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூச்சு திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு வர வேண்டும். மூச்சு திணறல் இல்லாத கொரோனா நோயாளிகள் கோவிட் செண்டர் செல்ல வேண்டும். அங்கு பிரச்சனை ஏற்படும் போது உடனடியாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்று கொரோனா சிறப்பு அதிகாரி சித்திக் பேட்டியளித்தார்.
சென்னையில் 31,295 பேர் கோவிட்- 19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அதில் 25 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகசவும் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அளவு வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
"திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினசரி தரப்படும் ஆக்சிஜன் விநியோகம் 5 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தினசரி தேவையோ 7 மெட்ரிக் டன்.
தர்மபுரி மாவட்டத்துக்கு தினசரி ஒரு மெட்ரிக் டன் விநியோகம் இருக்கிறது ஆனால் தேவையோ தினசரி 3 மெட்ரிக் டன்.
திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன்.
நாமக்கல் மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது.
தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. தேவையோ தினசரி ஒரு மெட்ரிக் டன்னாக இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது.
அரசிடம் இப்பொழுது எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும்"
என்று தெரிவித்தார்.
டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின்னணு மருத்துவ ஆய்வகம் (டிஇபிஇஎல்), தேஜஸ் என்ற இலகு ரக விமானத்தில் பயன்படுத்தப்படுத்துவதற்காக உருவாக்கிய மருத்துவ பிராணவாயு தொழில்நுட்பம், கோவிட்-19 நோயாளிகளுக்கு பயனளிக்கவுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் கீழ் அடுத்த மூன்று மாதங்களில் 500 மருத்துவ பிராணவாயு ஆலைகள் நிறுவப்படும் என்றும், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் நிறுவனம் 332 மருத்துவ பிராணவாயு ஆலைகளையும், கோயம்பத்தூரின் டிரைடன்ட் நியூமாடிக்ஸ் தனியார் நிறுவனம் 48 ஆலைகளையும் அமைக்க டிஆர்டிஓ முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது பரவல் அதிகரித்து வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். இந்த பெருந்தொற்று அவசர காலத்தில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ரஷியா செய்யும் என்றும் ஆதரவு அளித்தார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 13,826 ஆக அதிகருத்துள்ளது.
Background
உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தற்போதைய பிராணவாயு உற்பத்தி அளவை மாற்றியமைத்து பெருந்தொற்று சமயத்தில் உதவும் வகையில் மருத்துவ பிராணவாயுவை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா , உர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
பொது, தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளைச் சேர்ந்த உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். உர ஆலைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு, கொவிட் நோயாளிகளுக்கு விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் .
சென்னையில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க முன்அனுமதி தேவையில்லை என்றும், தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். முன்னதாக, கூடுதல் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்துவதற்காக சென்னையில் உள்ள விடுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பு கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -