TN Corona LIVE Updates : மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு முறை - தமிழக அரசு
அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று 31 ஆயிரத்து 892 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 261 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் 288 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 20 ஆயிரத்து 37 நபர்கள்.
காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு
ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் டாக்டர் ரெட்டி லெபாரட்டரியில் செலுத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் தீபக் சாப்ரா ஐதராபாத்தில் இதனைச் செலுத்திக்கொண்டார். இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி ஒன்றன் விலை 995 ரூபாய். வரும் வாரங்களில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு மட்டத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கான உதவி எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – 044-27427412, 2742 7414, 1800-425-7088, 1077, சென்னை – 98844 69375, 044- 4612 2300, 2538 4520, காஞ்சிபுரம் – 044- 2723 7107, 2723 7207, கோவை – 0422 – 2306 051, 230 6052, 230 6053, 230 0295, 230 0296
ஆக்சிஜன் மற்றும் கொரோனா அத்தியாவசிய மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்போர் மற்றும் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினர்
போதிய பயனாளிகள் இல்லாத காரணத்தினால், ஜூன் 1ம் தேதி வரை சில சிறப்பு ரயில்களை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதசாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அபாக்ஸ் லெபரட்ரீஸ் ( சவுந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் மருந்தக நிறுவனம் ) சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். அவரின் கணவர் உடனிருந்தார்.
கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று தமிழக முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு இந்த நிதியை அவர் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் மேலும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 80,947 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,099 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ள உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கு அதிகமான கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,62,317 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 1 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 19 பேர் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுய் காரணமாக மரணமடைந்து வருகின்றனர்.
நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " பொது மக்களின் நலன் கருதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள வளாகம்) இரண்டு கவுண்டர்கள் அமைத்து தமிழ் நாடு மருத்துவ பணிகள் கழகம் ரெம்டெசிவிர் மிகக் குறைந்த விலையில் 26.04.2021 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப 15.05.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் Inj ரெம்டெசிவிர் மருந்தானது ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் வழங்கப்பட உள்ளது. தினசரி 300 நபர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் ஐந்தாவது நுழைவுவாயில் (மை லேடி பூங்கா) மூலமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு மருந்து வாங்கிய பின்னர் நான்காவது வாயில் (மை லேடி பூங்கா) வழியாக வெளியேற அனுமதிக்கப்படுவர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து, பொறுமை காத்து மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம். தயவுசெய்து இடைத்தரகர்கள் எவரையும் அணுக வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
தும்பலஹள்ளி அகதி முகாமைச் சேர்ந்த 3 ஈழத்தமிழ் அகதிகள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களை, கொரோனாவிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகொள் விடுத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "
தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளி அகதிமுகாமில் 220 குடும்பங்கள் உள்ளனர்.சுமார் 800 பேருக்கு மேல் அங்கு வசிக்கின்றனர். அவர்களில் 40பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் இப்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். தியாகராஜா (வயது50) என்கிற ஈழத்தமிழர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்பு எண் 9843473970) பிரகாஷ் (40) என்ற ஈழத் தமிழர் தர்மபுரி மருத்துவமனையில் இதுவரை படுக்கை கிடைக்காமல் காத்திருக்கிறார். புவனா (36)
என்பவர் ஆக்ஸிஜன் அளவு குறைந்து முகாமிலேயே உயிருக்குப் போராடுகிறார். கொரோனா பாதிப்பால் ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளைக் காப்பாற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"
என்று தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 90 நாட்களாக தினசரி கொரொனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இன்னும், சென்னை அதன் உச்சகட்ட பாதிப்பு நிலையை (Peak Infection) அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் அதன் உச்சகட்ட பாதிப்பு நிலையை கடக்கத் தொடங்கிவிட்டன.
சென்னையில் தற்போது 42579 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 12,930 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதாவது, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக உள்ளன. அறிகுரியற்ற மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட 70 சதவிகித நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4.6% (1990 பேர்) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17 சதவிகிதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையில் உள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையம் கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த மையம் கிட்டதட்ட 9 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. 2012-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அமைக்க அனுமதியளித்தது. இந்த மையம் அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்ற (universal Immunization programme) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இம்மையத்தின் மூலம் தடுப்பூசி தயாரிப்பு, ஆராய்ச்சி ஆகியவை நடத்த வழிவகை செய்யப்பட்டது.
எனினும் தற்போதுவரை இந்த மையம் ஒரு நோய்க்கு கூட தடுப்பூசி தயாரிக்கவில்லை. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது ஹாண்ட் சானிடைசர் மட்டும் தயாரித்தது. இந்த மையத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் ஜனவரி 16-ஆம் தேதி இந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தற்போது இங்கு தடுப்பூசி தயாரிக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல், இதுவரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 9,294 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 11,835 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 6,439 வென்டிலேட்டர்கள், சுமார் 4.22 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மூன்று அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசும், பாரத் பயோடெக் நிறுவனமும் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இருப்பினும், உயிர் பாதுகாப்பு நிலை 3 (பிஎஸ்எல் 3) ஆய்வகங்களில் மட்டுமே கோவாக்சின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்தார்.
முதற்கட்டமாக Haffkine Biopharmaceutical Corporation Ltd(estd 1975), Indian Immunologicals Ltd(estd 1982), Bharat Immunologicals & Biologicals Ltd(estd 1988) ஆகிய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 24 மாநிலங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity Rate) 15 சதவிகித்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த விகிதம் 10% க்கும் கூடுதலாக இருந்தால் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
8 மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக உள்ளது.
வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே இந்த விகிதம் 5க்கும் குறைவாக உள்ளன.
கோவா, புதுச்சேரி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதாவது, புதுச்சேரியில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதில் குறைந்தது 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
நாடு முழுவதும், 338 மாவட்டங்களின் ஒரு வார கால (மே 6 - 12) தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் 22- 28 வார இடைவெளியில், தினசரி கொரோனா பரிசோதனை அதிகிரித்து தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது.
ஏப்ரல் 29 -மே 5 வார இடைவெளியில், இந்த எண்ணிக்கை 182 ஆக அதிகரித்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மாதிரிகளை சோதனை செய்வதில் எத்தனை தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன என்பதை பொறுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் கணக்கிடப்படுகிறது.
இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, நாடுமுழுவதும் 338 மாவட்டங்களில் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாட்டின் குடிமக்களுக்காக தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அமெரிக்காவின் தேசிய ஒழுங்குமுறை அமைப்புகள், ஐரோப்பிய மருத்துவ முகமை, இங்கிலாந்து, ஜப்பான் அல்லது உலக சுகாதார அமைப்பு (அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியல்) ஆகியவற்றால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த அவசரகால அனுமதி வழங்கப்படும். இறக்குமதி உரிமம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 68 பேருக்கு ரத்த அழுத்தம், சுவாச கோளாறு போன்ற எந்த இணை நோய்களும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 50 வயதுக்குட்பட்டவர்களின் ( N0- Comorbisities) இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எந்த வித இணை நோய்களும் இல்லாத 20 - 30 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும், வாசிக்க Tamil Nadu corona crisis: இந்த வயதினருமா? மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. ஏன்?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,287 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,98,945 ஆக உள்ளது. அதாவது மொத்த பாதிப்பில் 86.63 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
Background
Tamil Nadu Corona Virus News: இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையின் தளத்தின் வாயிலாக ஏறத்தாழ 50 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமுடக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தடைப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆலோசனைகளை வழங்கி தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
மாடர்னா, ஃபைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் எளிதாக இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அவற்றின் உற்பத்தியாளர்களை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோருமாறு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -