நாட்டின் மிகவும் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆகும். மிகவும் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்குவதால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மிகவும் பிரபலம் ஆகும்.
இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 80 விமானிகளை தற்காலிக விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு அந்த விமானிகளுக்கு தற்காலிக விடுப்பு அளித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அந்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானங்களின் விமானிகளான 40 பேரும், க்யூ400 விமானங்களின் பணியாற்றும் 40 விமானிகளும் தற்காலிக விடுப்பில் அனுப்பப்பட உள்ளனர். அதேசமயத்தில், தற்காலிக விடுப்பில் விமானிகளை அனுப்பினாலும், அவர்கள் அனைரும் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் போயிங் 737 விமானங்கள் ஏழு விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதனால், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட உள்ளனர்.
மேலும் படிக்க : Crime : போதை மாத்திரைக்கு பணம் கொடுக்காத தாத்தா.. பேரன் செய்த கொடூரம்.. அதிர்ந்த கிராமத்தினர்..
மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் குத்தகைக்கு விமானங்களை இயக்கி வருவதால் அவர்களுக்கு அதிகளவில் விமானிகள் தேவைப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே 80 விமானிகளை ஊதிம் இல்லாமல் தற்காலிக விடுப்பில் அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021ம் ஆண்டு ஆண்டு தொடக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமாக 95 விமானங்கள் இயங்கி வந்தது. ஆனால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கீழ் இயங்கி வந்த குத்தகை விமானங்கள் பலவற்றை திருப்பி அனுப்பியதாலும், பராமரிப்பு பிரச்சினைகள் மற்றும் உதிரிபாகங்கள் செலவு காரணமாக சில விமானங்களை இயக்காததாலும் தற்போது 50 விமானங்கள் வரை மட்டுமே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், விமானிகளின் தேவை குறைந்துள்ளது.
ஏர்கிராப்ட் நிறுவனத்தின் க்யூ400 விமானங்களின் உதிரிபாகங்கள் இல்லாததால் 10 க்யூ 400 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : "ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..
மேலும் படிக்க : Yogi Adityanath Temple : ”யூ ட்யூபில் பணம் வருது” : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டிய நபர் பேட்டி