உத்தரப்பிரதேசத்தில் போதை மருந்துக்கு பணம் கொடுக்க மறுத்த தாத்தாவை பேரன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் சஹ்ரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிருவா. இவர் விவசாயி. இவர் சந்தவுலி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவருக்கு சோனு என்ற பேரன் ஒருவர் இருந்தார். இந்நிலையில் ஞாயிறு இரவன்று சோனு தனது தாத்தா பிருவாவிடம் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டுள்ளார். அதன் நிமித்தமாக சோனுவுக்கும் பிருவாவிற்கும் சண்டை நடந்ந்துள்ளது. ஆத்திரத்தில் சோனு தனது தாத்தாவின் கழுத்தை ஒரு கயிற்றால் இருக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 


இதற்கிடையில் சோனுவை ஒரு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இது எல்லா செய்திகளைப் போல் நாம் கடந்து சென்று விடலாம். ஆனால் நமக்குத் தெரிந்தது ஒரு சோனு மட்டும் தான். இதுபோன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று போதையின் பாதையின் சிக்கித் தவிக்கின்றனர்.


 போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது. உலகம் நவீன வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இதுபோன்ற பிரச்சினைகள் மிக அதிகமாக உள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் போக்கின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. போதை மருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலைப் போக்குவரத்து விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மன நோய் போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. சூதாடுதல், பொருள்கள் வாங்குதல், கணினி மூலமாக தகாத தொடர்பு கொள்ளுதல், கணினி மூலமாக உடலுறவு சம்பந்தப்பட்ட கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பார்த்தல், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கும் உறவுகளுடன் அளவுக்கு அதிகமான தொடர்பு கொள்ளுதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு போதை தரும் பழக்கங்களில் இளைஞர்கள் சிக்கிக் கிடக்கின்றனர்.  போதை மருந்துப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக (Drug Deaddiction Program - DDAP) என்ற திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது.


பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம்:


போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்


இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும்.  போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்... இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும்.