Viral Video : பீகார்  மாநிலத்தில் தலைமை ஆசிரியையை ஒருவரை, சக ஆசிரியைகள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பீகார் மாநிலம் பாட்னா பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலைமை ஆசிரியைக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் மூன்று ஆசிரியைகளுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், ஆசிரியைகளில் ஒரு தரப்பினர் வகுப்பறையின் ஜன்னல்களை மூடுமாறு கூறி உள்ளார். மற்றொரு தரப்பினர் அதற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தலைமை ஆசிரியை வகுப்பறையில் இருந்து வெளியேறினார்.


அப்போது, இவரை பின்தொடர்ந்து இரண்டு ஆசிரியைகள் வந்தனர். பின்னர், தலைமை ஆசிரியையை துரத்தி வந்த இரண்டு ஆசிரியைகள், அங்குள்ள வயல்வெளியில் தள்ளி சரமாரியாக அடித்ததோடு, செருப்பால் முகத்தில் கடுமையாக தாக்கினர். அதன்பின்னர், அந்த வழியாக சென்ற சிலர் சண்டையை விலக்கி விட்டனர்.


இந்த சம்பவத்தை அங்குள்ள மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் தலைமை ஆசிரியை காந்தி குமாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆசிரியைகள் அடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 







இரு ஆசிரியர்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட தகராறு காரணமாக, பள்ளியில் மோதிக் கொண்டதாக கல்வி அதிகாரி நரேஷ் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி அதிகாரி நரேஷ் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க


Disease X : விடாது துரத்தும் நோய்கள்...அச்சுறுத்தும் 'Disease X'...உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது இதை பற்றித்தானா?


Amul: 'உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் அமுல்..' பின்னணி என்ன..? முதலமைச்சரே எதிர்த்தது ஏன்? - விரிவான அலசல்