காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டி.கே சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது காத்தாடி மோதியதால் அந்த ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது. இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரக்கப்பட்டது.


காங்கிரசின் கர்நாடகா பிரிவு தலைவர், கர்நாடகா மாநிலம், கோளார் மாட்டத்தில் உள்ள முல்பகல் என்ற இடத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். பெங்களூரில் உள்ள ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது ஒரு பட்டம் ஹெலிகாப்டரின் மீது மோதியுள்ளது. இதனால் காக்பிட் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்ததால், ஹெலிகாப்டர் உடனடியாக HAL விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டதாக சிவகுமாரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


விமானத்தில் விமானி, பத்திரிகையாளர் உள்ளிட்டோரும் சிவகுமாருடன் இருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 


கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.


பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.    


பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வந்தால், தீபாவளி, யுகாதி, வினாயகர் சதூர்த்தி ஆகிய தினங்களில்  கர்நாடகா மக்களுக்கு இலவச சிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000, வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 3000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. 


கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், பாஜகவும், ஆட்சியை கட்டாயம் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரசும் தேர்தல் பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


Income Tax Raid: தொடரும் வரிமான வரித்துறை ரெய்டு.. சிக்கிய பிரபல ஜவுளிக்கடை... 60 இடங்களில் சோதனை..


Tamilnadu Cabinet: தமிழ்நாட்டில் 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்