குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘
கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலா 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்
வேலையில்லா டிப்ளமோ முடித்த பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்
விவசாய கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்
தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும்
சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் வழங்கப்படும்
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்
மீனவர்கள் வாழ்வாதாரம் உயர 5 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி அளவில் நீல பொருளாதாரம் உருவாக்கப்படும்
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 6000 உதவி தொகை வழங்கப்படும்
மேகதாது அணை கட்ட ரூ.9000 கோடி ஒதுக்கப்படும்
பால் மானியம் லிட்டருக்கு 5 லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படும்
பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படும்
அனைவருக்கும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50% லிருந்து 75% ஆக உயர்த்த நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை போன்ற, இந்துத்துவா அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் போன்ற, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புகள் தடை செய்யப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. பாஜக NRC அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பித்தக்கது.
வரும் 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக -காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க