இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகள் பத்ம விருதுகள். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், எந்த துறையிலும் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன.


அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், முப்படையின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோருக்கு பதம் விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




 அதேபோல், கூகுள் சி. இ. ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா, மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யா உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன், சமூக செயற்பாட்டாளர் தாமோதரன், இசைக்கலைஞர் ஏகேசி நடராஜன், முத்துகண்ணம்மா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் பத்ம பூஷன் விருதை வாங்கப்போவதில்லை என சந்தியா முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் சௌமி சென்குப்தா, மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து விருதுகுறித்து தெரிவித்ததாகவும், அதை ஏற்க சந்தியா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 


மேலும் அவரைப் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ வழங்குவது மிகவும் அவமானகரமானது என்றும் கூறினார். சந்தியாவுக்கு முன்னதாக புத்ததேப் பட்டாச்சார்யாவும் பத்மபூஷன் விருதை பெறப்போவதில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு


Trichy | 13 வயதில் அதிக உடல் பருமன்... யூடியூப் பார்த்து தற்கொலை செய்த மாணவி... திருச்சியில் அதிர்ச்சி!