டெல்லியில் உள்ள கிழக்கு சாஸ்திரி பூங்கா பகுதியில் தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வருபவருக்கு8 வயதான மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு வெளியே அந்த 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமி விளையாடிய பகுதியில் இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் 10 முதல் 12 வயது மட்டுமே இருக்கும். இந்த நிலையில், அவர்களில் ஒரு சிறுவன் சிறுமியை திடீரென இழுத்துச் சென்றான். பின்னர், அந்த இரண்டு சிறுவர்களும் சேர்ந்து அந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அழுதுகொண்டே வீட்டிற்கு திரும்பிய அந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால், உடனடியாக சிறுமியை மருத்துவமனையிலும் அனுமதித்தனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு சிறுவர்களையும் போலீசார் உடனே கைது செய்தனர்.
அவர்கள் மீது ஐ.பி.சி. 363 ( ஆள்கடத்தல்) ஐ.பி.சி. 376 ஏபி( பாலியல் தாக்குதல்) ஆகியே போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவன் பீகாரைச் சேர்ந்தவன். தந்தையை இழந்த அந்த சிறுவன் தனது உறவினர்களின் வீட்டில் வசித்து வருகிறான். அவனது தாய் பீகாரில் வசித்து வருகிறார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகளவு பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 8 வயது சிறுமியை 12 வயதுகூட நிரம்பாத இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்