73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


 






கொடி ஏற்றிய பிறகு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வீர தீரச் செயலுக்கான சவுரியா சக்ரா விருதுகளை டெல்லியில் வழங்கி வருகிறார். ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். இந்த விருதினை ஏஎஸ்ஐ பாபுவின் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் பெற்றுக்கொண்டனர். 


 






அசோக் சக்ரா என்பது நாட்டின் மிக உயர்ந்த அமைதி கால வீரிய விருதாகும். ஆகஸ்ட் 29, 2020 அன்று ஸ்ரீநகரில் ஒரு நடவடிக்கையின் போது பாபு ராம் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜேகேபியின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பாபு ராமுக்கு  குடியரசுத் தலைவரால் இந்த சிறந்த கேலண்ட்ரி விருது அங்கீகரிக்கப்பட்டது.


குடியரசு தின விழாவை நேரலையில் காண : 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண