திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிவானி (13) என்ற மகள் இருந்தார். திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இதையடுத்து கணவன் மனைவி பிரிந்து வாழ்வது வருவதால் திருச்சியில் உள்ள தனது அம்மா வீட்டில் சிவானி வசித்து வருகிறார்.
தினமும் ஷர்மிளா காலையில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். நேற்று முன்தினம் வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து கதவை தட்டியவுடன் மகள் கதவை திறக்கவில்லை. பின்பு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது தனது மகள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.
உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணை செய்த போலீசார் தற்கொலை முடிவு செய்துகொள்ள காரணம் என்னவென்று ஆதாரங்களை சேகரித்தனர். முன்னதாக மாணவி தன் தாயிடம் உடல் பருமனாக இருப்பதாகவும் தொடர்ந்து குறிப்பிட்ட வந்துள்ளார். தாய் வங்கியில் பணிபுரிவதால் வீட்டிலேயே இருக்கும் இவர், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பலவகை உணவுகளை உட்கொண்டு வந்துள்ளார். இந்த உணவுகள் மூலம் அவருடைய உடல் பருமனாகி இருக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிவானி, தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால், எவ்வாறு தற்கொலை செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இதனால் குழம்பிய அவர், யூடியூப் மூலம் எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என பல வழிகளை தேடியுள்ளார். அவரது மொபைல் போனை பரிசோதித்த போது, அவர் யூடியூப்பில் தேடிய விபரங்கள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்த சிவானி, யூடியூப் குறிப்புகளின் படி அதை நிறைவேற்றி, உயிரை மாய்த்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு சென்று, பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன் பின் அவரது சடலம், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 13 வயது பள்ளி மாணவி தற்கொலை குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
உடல் பருமன் ஒரு குறையல்ல. அது வாழ்வியலின் ஒருபகுதி. அதை நம்மால் சரிசெய்ய முடியும். அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் தேவையற்றது. பெற்றோரிடம் ஆலோசித்து, மருத்துவர்களை அணுகினால் அனைத்திற்கும் உண்டு.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்