Republic Day 2023 :  நாடு முழுவதும் குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கட்டிடங்கள், என பிரம்மாண்டமாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு  தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. 


குடியரசு தினம் 


நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.  


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 


இந்தியாவின் உள்நாட்டு திறன், பெண்களின் வலிமை, ராணுவத்திறன், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் அணிவகுப்பு மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராணுவ பிரிவில் முப்படைகள் அணிவகுப்பில் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டக்கப்படையும் இடம் பெறுகிறது. அதேசமயம் கடற்படையில் 144 இளம் மாலுமிகளும், விமானப்படையில் 148 வீரர்களும், முதல்முறையாக 3 பெண் அதிகாரிகள், அக்னிபாத் திட்டத்தில் இருந்து 6 வீரர்களும் குடியரசுத்தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். 


கூகுள் டூடுல்


வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம். போலவே, இந்தாண்டு குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டுள்ளது.






அப்புகைப்படத்தில், இந்திய கலாச்சாரம், பண்பாடு, சுதந்திர போராட்ட தியாகம் தொடர்பானவற்றை, கூகுள் காட்சிப்படுத்தி குடியரசு தினத்தை சிறப்பித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் கைக்கிள் சாகசம், சிஆர்பிஎஃப் அணிவகுப்பு குழு உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம்பெற்றுள்ளது.




மேலும் படிக்க


Republic Day 2023: இன்று குடியரசு தினம்.. தேச தலைவர்களின் டாப் 10 சிந்தனைகளும், மேற்கோள்களும்!


Republic Day 2023: தமிழ்நாட்டில் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்... சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!


Republic Day: இன்று மூவர்ணத்தில் முகத்திற்கு மேக்-அப் போட வேண்டுமா? அப்போ இதைப்படியுங்க!