ஃபேஸ் பெயிண்டிங் முதல் கண்களில் ஐ ஷேடோ வரை…முகத்திற்கு மூவர்ணம் பூச சில ஐடியாக்களைப் பார்க்கலாம் வாங்க.


மூவர்ண ஃபேஸ் பெயிண்டிங்:




காவி, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களையடங்கிய தேசியக் கொடியை அப்படியே முகத்தில் வரையலாம். இதற்காக, முகத்திற்கென்றே பிரத்யேகமாக வண்ண வண்ண பெயிண்ட்கள் விற்கப்படுகின்றன. அதை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். அப்படியில்லையெனில், பல நிறங்களில் விற்கப்படும் காம்பேக்டகளையும் உபயோகப்படுத்தலாம். 


நகத்திற்கு அலங்காரம்:




இன்றைய இளவட்டாரங்களிடையே நெயில் ஆர்ட் எனப்படும் நகைக்கான அலங்காரம் மிகவும் ஃபேமஸ். இதையும், மூவர்ணத்தில் செய்ய முயற்சி செய்யலாம். இதற்கு ஒரு க்ளிட்டர் நெயில் பாளிஷ், காவி, பச்சை மற்றும் வெள்ளை நிற நெயில் பாலிஷ்கள். நகத்தின் மேல் நெயில் பாளிஷ்களை இட்டவுடன், அதை நெயில் லேம்ப் எனப்படும் மெஷினில் வைத்து உங்கள் நகங்களை உலரவிடுங்கள். இந்த நெயில் ஆர்ட்டில், கொடிகளின் ஸ்டிக்கர்களையோ அல்லது எழுத்துக்களையோ கூட உபயோகித்துக்கொள்ளலாம்.


மூவர்ணத்தில் உதட்டுச்சாயங்கள்:




அழகிற்காக உதட்டிற்கு பூசப்படும் சாயங்களையும் மூவர்ணத்தில் போட்டுக்கொள்ளலாம். மேல் உதட்டில், காவி நிறத்தையும், கீழ் உதட்டிற்கு மேலே லேசான வெள்ளை நிறத்தையும் அதற்கு கீழே பச்சை நிற உதட்டுச்சாயத்தையும் தடவலாம். 


மூவர்ணத்தில் ஐ-ஷேடோ




கண்களுக்கு மேல் கவர்ச்சிக்கொடுக்கும் ஐ-ஷேடோக்களை மேக்-அப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐ-ஷேடோவின் ப்ளேட்டில் ஏகப்பட்ட கலர்கள் இருக்கும். முதலில் காவி நிறத்துடன் சிறிது ஜிகினா(கோல்டன்) நிறத்தையும் இணைத்து, மேலிருந்து விங் போன்று கண்களின் மேலே பூச வேண்டும். அதையடுத்து, வெள்ளை நிற காஜலை எடுத்து கண்களுக்கு கீழே அப்ளை செய்யவும். . இதற்கு கீழே பச்சை நிறத்தை சிறிதளவு பூசினால், மூவர்ண ஐ-ஷேடோ மேக்-அப் ரெடி. 


மூவர்ண ப்ளஷ் லுக்:


நீங்கள் எப்போதுமே உபயோகப்படுத்தும் ஃபவுன்டேஷனை முதலில் முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். அதன் பிறகு கன்சீலரை உபயோகிக்கவும். சிறிய அளவிளான ப்ரஷ்ஷினை எடுத்து, இரண்டு கண்ணங்களிலும் ஆரஞ்சு நிற ப்ளஷ் பவுடரை அப்ளை பண்ணுங்கள். ஆரஞ்சு நிற ஐ-ஷேடோவை எடுத்து உங்கள் கண்களுக்கு மேல் பூசவும். அதன்பிறகு, சிறிதளவு பச்சை நிற ஐ-ஷேடோவை எடுத்து கண்களுக்குக் கீழே பூசினால், அழகான மூவர்ண ப்ளஷ் லுக்கில் அம்சமாக இருப்பீர்கள். 


நீங்கள் இன்னும் கொஞ்சம் நாட்டுப்பற்றைக் காட்ட விரும்பினால், உடல் முழுவதும் பச்சை, வெள்ளை, காவி நிறத்தை பூசிக்கொண்டு போட்டோ பிடித்து ஸ்டேட்டஸ் போடலாம். இது மட்டுமன்றி, சிகை அலங்காரத்திற்காகவும் மூவர்ணத்தில் விக்குகள் விற்கின்றன. அவற்றை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு அழகுபாருங்கள்.


மேற்கூறிய எதையும் உங்களால் செய்ய இயலவில்லையென்றால், உங்களது இரண்டு கண்ணங்களிலும் மூவர்ணக் கொடியை வரைந்துக்கொள்ளலாம்.