விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வருடந்தோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கௌரவித்துவருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருது பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
அந்த விழாவில், கேல்ரத்னா விருது பெற்றவர்கள்:
அர்பிந்தர்சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), பவானி தேவி (வாள்சண்டை), மோனிகா, வந்தனா கட்டாரியா (இருவரும் ஹாக்கி), சந்தீப் நார்வால் (கபடி), ஹிமானி உத்தம் பராப் (மல்லர்கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் பூனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, சுமித், நீல கண்ட ஷர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர்
குர்ஜந்த்சிங், மன்தீப்சிங், ஷம்சிர் சிங், லலித்குமார் உபாத்யாய், வருண் குமார், சிம்ரன்ஜித் சிங் (16 பேரும் ஹாக்கி வீரர்கள்), யோகேஷ் கதுனியா, நிசாத் குமார், பிரவீன்குமார், ஷரத் குமார் (4 பேரும் பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாராதுப்பாக்கி சுடுதல்), பவினா பட்டேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை) ஆகியோர் அர்ஜுனா விருது பெறுகிறார்கள்.
அதேபோல் கேல்ரத்னா விருது பெற்றவர்கள்:
நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவிக்குமார் (மல்யுத்தம்), லவ்லினா (குத்துச்சண்டை), ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), பாரா ஒலிம்பிக் வீரர்களில் அவானி லெக்ரா, சுமித் ஆன்டில், பிரமோத் பகத், கிருஷ்ணா நகர், மணீஷ் நர்வால், மிதாலி ராஜ், சுனில் சேத்ரி, மன்பிரீத் சிங் ஆகியோர் கேல்ரத்னா விருது பெறுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: டி 20 உலகக்கோப்பை தொடரிலிருந்து கான்வே விலகல்... நியூசிலாந்து அணிக்கு பின்னடைவா..?
”உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் எனக்கும், கோலிக்கும் சம்பந்தமில்லை” - ரவி சாஸ்திரி பகீர்