இந்தியாவில் நடைபெற இருந்த டி  20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. இதுவரை நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி பொட்டிக்குள் தகுதி பெற்றது. 


இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியானது துபாய் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.  இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 




இந்தநிலையில், முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டேவன் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, லிவிங்ஸ்டோன் பந்தை அடிக்க முற்பட்டார். அப்பொழுது, பின்னே வந்த பந்தை விக்கெட் கீப்பர் பட்லர் ஸ்டம்பிங் செய்து டேவன் கான்வேவை வெளியேற்றினார்.


இதனால் ஆத்திரமடைந்த டேவன் கான்வே தனது பேட்டின் மீது ஓங்கி குத்தினார். இதையடுத்து, அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் டேவன் கான்வே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். 


மேலும், டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு மேற்கொண்டு 3 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல்  டி 20 போட்டியானது வருகின்ற 17 ம் தேதி ஜெய்ப்பூரிலும், 2 வது போட்டி 19 ம் தேதி ராஞ்சியிலும், 3 வது மற்றும் கடைசி போட்டி 21 ம் தேதி கொல்கத்தாவிலும்  நடைபெற இருக்கிறது. அதேபோல், டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது. 


நியூசிலாந்து அணி மேற்கொள்ளும் இந்த தொடரில் இருந்தும் நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் டேவன் கான்வே விலகியுள்ளதாக தெரிகிறது. 


மேலும் செய்திகளை காணABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண