மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்களவை முடங்கி போனதை தொடர்ந்து, மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த மணிப்பூர் விவகாரம்:
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் அந்த பிரச்னை எதிரொலித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர், ஜூலை 24ஆம் தேதி காலை 11 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க: Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!
இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இதை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நான் கூறியிருந்தேன். மணிப்பூர் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
என்னதான் நடக்கிறது?
ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல், மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த விடாத சூழ்நிலையை உருவாக்க விரும்புவதை நான் காண்கிறேன். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்திருக்க வேண்டிய தீவிரம் அவர்களிடம் இல்லை என்று நான் தெளிவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்" என்றார்.
இதையும் படிக்க: Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.
இந்த ஜனநாயகக் கோயிலுக்கு (நாடாளுமன்றம்) பக்கத்தில் நான் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த நாடும் அவமானப்பட்டு விட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை வலுப்படுத்துமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.