மூத்த குடிமக்களுக்கான சலுகை ரயில் கட்டணத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான சலுகை ரயில் கட்டணங்களை எந்த நேரத்திலும் விரைவாக தொடங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிகிறது.


ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை மக்களவையில் மூத்த குடிமக்களுக்கான ரயில்வே துறையில் திரும்பப் பெறப்பட்ட சலுகைகள் தற்போது புதுப்பிக்கப்படாது என்று தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். “சலுகைகளை வழங்குவதற்கான செலவு ரயில்வே துறையில் அதிகமாக உள்ளது. எனவே மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து வகை பயணிகளுக்கும் சலுகைகளின் வரம்பை விரிவுபடுத்துவது தற்போது விரும்பத்தக்கது அல்ல" என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தீபக் அதிகாரியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.


மேலும் படிக்க: Annapoorani: அனாதையாக இருக்கும் அண்ணப்பூரணியின் அரசு சிலை..! காரணம் இதுதானாம்...!


தீபக் அதிகாரி அமைச்சரிடம் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ரயில் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணங்கள் என்ன?. அந்த நடவடிக்கை நிரந்தரமானதா? இல்லையெனில், தள்ளுபடி செய்யப்பட்ட ரயில் கட்டணம் மீண்டும் தொடங்கப்படும் நேரம் எது? என்று கேள்வி எழுப்பினார்.


“கொரோனா மற்றும் ஊரடங்கால் கடந்த  கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்திய ரயில்வே நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து சலுகை அளித்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய சவால்கள் காரணமாக, 2019-2020ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், 2020-21ஆம் ஆண்டில் மொத்தப் பயணிகளின் வருவாய் குறைவாகவே உள்ளது. சலுகைகளை வழங்குவதற்கான செலவு  ரயில்வே துறையில் அதிகமாக இருக்கிறது. எனவே மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து வகை பயணிகளுக்கும் சலுகைகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவது தற்போது இயலாத காரியமாகும். மேற்கூறிய சவால்கள் இருந்தபோதிலும், சலுகைகளில் நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 15 சலுகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் நிறுத்தப்படும்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


மேலும் படிக்க: Women's Football: இந்திய மகளிர் கால்பந்து பயிற்சி முகாமில் இடம்பிடித்த 6 சிங்கப்பெண்கள்.. வாழ்த்திய எம்.எல்.ஏ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண