தமிழ்நாடு :



  • 2022 - 2023 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் : புதிய அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டம் 

  • சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு : உச்சநீதிமன்றம் அனுமதி 

  • பொதுமக்களின் புகாரை விசாரித்து குறைகளை களைய வேண்டும் : காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் 

  • தமிழ்நாட்டில் உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் போட்டி : முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம் 

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

  • சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 17 முதல் காலை 5 மணி இரவு 11 மணி வரை இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் 

  • வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மார்ச் 19 அன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் 

  • நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்தனர். 

  • நீட் விலக்கு மசோதா தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கிறது - முதலமைச்சர் முக ஸ்டாலின் 


இந்தியா : 



  • ஜம்மு - காஷ்மீர் : ஸ்ரீநகரின் வடக்கு பகுதியில் நிலஅதிர்வு - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு 

  • லடாக் எல்லை பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு 

  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,876 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

  • இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் மின்சார டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. 

  • பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் பதவியேற்றார்.


உலகம் :



  • உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு 

  • ஜப்பானில் புகுஷிமா பகுதியில் 7. 3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பற்றி விவாதிக்க அடுத்த வாரம் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு 


விளையாட்டு :



  • ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டாப்-5 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனைப்படைத்திருக்கிறார் ஜூலான் கோஸ்வாமி

  • இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சி முகாமிற்கு 6 தமிழ்நாடு வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண