இந்திய மகளிர் கால்பந்து அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளில் கடைசியாக பங்கேற்றது. அதில் சில வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடரின் பாதியிலேயே இந்திய அணி விலகியது. இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய மகளிர் கால்பந்து அணி கோவாவில் 7 நாட்கள் முகாமிட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது. 


இந்நிலையில் இதற்கு தேர்வாகியுள்ள வீராங்கனைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்துமதி கதிரேசன், சந்தியா ரெங்கநாதன், சுமித்ரா கனகராஜ், கார்த்திகா அங்கமுத்து,மாரியம்மாள் பாலமுருகன், சவுமியா நாராயணசாமி ஆகிய வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். 






இவர்களுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில், “நம்முடைய சிங்கபெண்கள் இந்திய மகளிர் கால்பந்து அணியில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது 6 பேர் இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 


இந்திய மகளிர் கால்பந்து அணியின் முகாம் கோவாவில் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று மற்றும் ஆசிய கால்பந்து போட்டிகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் மீண்டும் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதனால் இந்த முகாம் பெரும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் தனி ஒருவனாக உலக சாதனை படைத்து பாகிஸ்தானை காப்பாற்றிய பாபர் அசாம் !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண