'மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்' பொங்கலுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து!
வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாக பண்டிகைகள் திகழ்கின்றன என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோஹ்ரி பண்டிகை ஜனவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகள் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து:
Just In




குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாக இந்த பண்டிகைகள் திகழ்கின்றன. அவை உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள் இயற்கையுடனான நமது இணக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன. மக்கள் புனித நதிகளில் புனித நீராடி இந்த சந்தர்ப்பங்களில் தொண்டு செயல்களைச் செய்கிறார்கள்.
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்"
பயிர்களுடன் தொடர்புடைய இந்த பண்டிகைகள் மூலம், தேசத்திற்கு உணவளிக்க அயராது உழைக்கும் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். இந்த பண்டிகைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
அறுவடை திருநாளான பொங்கல் தமிழர்களின் கொண்டாட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையிலிட்டு வழிபாடுவார்கள்.
இந்த விடுமுறை நாட்களை கொண்டாட தான், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். போகியை தொடர்ந்து தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நீளும் விடுமுறை, கடுமையாக உழைக்கும் மக்களுக்கான அவசியமான ஓய்வுக்காலமாகவும் உள்ளது.
இதையும் படிக்க: Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்