சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி ( இன்று ) ஜனவரி 12ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில்  நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இத்திருவிழாவை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், கர்நாடக மாநில அரசும் இணைந்து நடத்தியது.


இளைஞர் கையில்:


இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி,  வளர்ச்சியில் உலக நாடுகளின் வரிசையில் 3ஆம் இடத்துக்கு இந்தியா  வரவேண்டும் என்பதே இலக்கு. விளையாட்டு, அறிவியல் என பல துறைகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும். இளைஞர்கள் சக்திதான் இந்தியாவின் வழிகாட்டியாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி இளைஞர் கையில் உள்ளது என தெரிவித்தார்.


அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை:


மேலும், இளைஞர் சக்தி இந்திய பயணத்தின் உந்து சக்தியாக உள்ளது. ஆகையால், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானவை. இளைஞர் சக்தியானது, இந்தியாவின் திசையை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. எனவே, இளைஞர் சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாம் நமது எண்ணங்களுடன் இளமையாக இருக்க வேண்டும்





பசுமை இளைஞர் திருவிழா:


இந்த ஆண்டின் இளைஞர் திருவிழா, பசுமை இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் வழங்கப்படும் நினைவுப்பரிசுகள், பதக்கங்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாலானவையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரை இயக்கப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.