பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ஊபர் பெண் ஓட்டுநர் மீது இரண்டு நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காஷ்மீர் கேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் அந்த பெண்ணிடம் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். 


ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து அவர்கள் கொள்ளை அடிக்க முயற்சித்தனர். இது தொடர்பாக, கடந்த ஜனவரி 9ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.


இதையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர். 


அங்கு, சமய்பூர் பட்லியைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை காவல்துறை கண்டறிந்தனர். பிரியங்காவிடம் விசாரணை மேற்கொண்டதில், வாடிக்கையாளரை அழைத்துச் செல்ல அவர் ஆட்டோவை ஓட்டி கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.


சேருமிடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்தபோது இரண்டு ஆண்கள் அவரது காரின் முன் வந்து கல்லால் ஜன்னலை உடைத்தனர். கல் அவரது தலையில் பட்டதில் காயம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடி துண்டுகள் அவரின் உடலில் காயத்தை ஏற்படுத்தியது.


சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ள பிரியங்கா, "நான் சத்தமாக கத்த ஆரம்பித்ததும் பீர் பாட்டிலால் தாக்கினர். நான் ஊபரில் உள்ள அவசர பொத்தானை அழுத்தினேன். அவசர எண்ணையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். 


ISBT பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இரண்டு பேர் என்னுடைய காரின் முன் வந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். கல் என் தலையில் பட்டது. உடைந்த கண்ணாடி என் உடலில் கீரலை ஏற்படுத்தியது.


கழுத்திலும் உடலிலும் பத்து தையல்கள் போடப்பட்டன. சம்பவம் நடந்து அரை மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் வந்து என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றார்.


 






காஷ்மீர் கேட் போலீஸாரின் கூற்றுப்படி, ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கொள்ளை முயற்சி குறித்த புகார் கிடைத்தது.