Watch Video : தைவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஒரு விமானத்திற்குள் பயணி ஒருவர் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீப காலமாகவே விமானத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அந்த வகையில் தற்போது அனைவரையும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, தைவான் சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 189 பயணிகளுடன் சுகுட் என்ற விமானம் தயாராக இருந்தது.
போர்டிங் பாஸில் இருந்து அனைவரும் விமானத்திற்குள் வந்து அமர்ந்துள்ளனர். விமானம் புறப்படும் சில மணி நேரத்திற்கு முன்பு, பயணி ஒருவர் தான் வைத்திருந்த செல்போனுக்கு பவர் பேங்கில் ஜார்ச் போட்டார். அப்போது, அந்த பவர் பேங்கில் இருந்து கரும்புகை எழத்துவங்கியது.
பயந்துபோன அவர் உடனே அந்த பவர் பேங்கை கையில் இருந்து கீழே போட்டுள்ளார். உடனே அந்த பவர் பேங்கில் தீ பற்றியுள்ளது. இதனால் விமானம் முழுவதும் தீ பரவியது. தீயும், புகையும் விமானத்திற்குள் சூழ்ந்துள்ளதால் பயணிகள் அலரினர். உடனே விமான பணிப்பெண்கள் தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். பின்னர் அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் அவர்களை வேறு விமானத்தில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பவர் பேங்கை வைத்திருந்த பயணி மற்றும் அருகில் இருந்த பயணிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் தைவான் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க
Jammu Kashmir : ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்...
வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் செலுத்தமுடியும்...விரைவில் அமலுக்கு வரும் திட்டம்...!