கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 






கர்நாடகா மாநில தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. மாநில தேர்தல் நடைபெற்ற பின் பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் ஒருவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது 113 இடங்கள் வெற்றி பெற வேண்டும். மதியம் 3 மணி நிலவரப்படி 224 தொகுதிகளில் 137 தொகுதிகள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துள்ளது.


கர்நாடகா தேர்தல் வெற்றியை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலில் கர்நாடக மாநிலத்தில் பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதலாளிகளுக்கு வேலை செய்யும் பா.ஜ.க விற்கு கர்நாடகா மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலை அனைத்து மாநிலங்களில் தொடரும். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும்” என தெரிவித்தார்.


அதேபோல அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில்,


இது பொதுமக்களின் வெற்றி. மோசமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக வேலை பார்த்துள்ளனர். மக்கள் எங்களின் வாக்குதிகளுக்காக வாக்கு அளித்துள்ளனர். 


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களையும் இன்று மாலை பெங்களூரு வருமாறு கூறியுள்ளோம். கட்சி தலைமை, நிர்வாகிகளை அனுப்பிய உடன் அடுத்தகட்டப் பணி தொடங்கும். இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிக்கப்படும்.


Karnataka Election Results 2023 LIVE: வெறுப்பை பயன்படுத்தி போராடவில்லை - தேர்தல் முடிவு குறித்து ராகுல்காந்தி


Karnataka Election Result: ’நாங்கள் ஒரு சிறிய கட்சி, எங்களுக்கு எந்த தேவையும் இல்லை’ - மஜத தலைவர் குமாரசாமி


Karnataka Election 2023: முந்துகிறதா காங்கிரஸ்? டெல்லி அலுவலகத்தில் தொடங்கிய கொண்டாட்டம்: மேளதாளத்துடன் ஆரவாரம்!