'இன்குலாப் ஜிந்தாபாத்' 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தின் 7ஆவது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தின் 7ஆவது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக, தற்கொலைகளை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த நெட்டில் அவர் விழுந்து உயிர் தப்பியுள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்களில் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என எழுதப்பட்டிருந்தது.
7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்:
Just In




மந்திராலயா என அழைக்கப்படும் மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் மும்பையில் அமைந்துள்ளது. சமீப காலமாக, இது போராட்ட களமாக மாறி வருகிறது. மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மந்திராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். நல்வாய்ப்பாக, அவர்கள் தற்கொலைகளை தடுப்பதற்காக போடப்பட்டிருந்த வலையில் விழுந்து மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, மந்திராலய வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க முக அங்கீகார அமைப்பு நிறுவப்பட்டது. இந்த நிலையில், மந்திராலய கட்டிடத்தின் 7ஆவது மாடியில் இருந்து நபர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரும், தற்கொலை முயற்சிகளைத் தடுக்க நிறுவப்பட்ட வலையில் விழுந்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், "நாசிக்கில் உள்ள அவரது சொத்து தகராறில் இருப்பது போல் தோன்றுகிறது. அங்கு, இது பற்றிய துண்டுப்பிரசுரங்களை அவர் எடுத்துச் சென்றுள்ளார். அவரை மீட்டு, அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். துண்டுப்பிரசுரத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் என எழுதப்பட்டிருந்தது" என்றார்.
இதையும் படிக்க: AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!