மலேசியாவை சேர்ந்த நபருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, புதிய பணியில் சேர்வதற்கு முன்பு தன்னுடைய வீட்டு உபயோக பொருள்களை விற்க அவர் முயன்றுள்ளார். உடனடியாக அதை விற்கும் நோக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.








தனது வீட்டின் புகைப்படங்களை முகமது சயாபிக் பேஸ்புக் குழு ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.


இதையும் படிக்க: ஆதரவு தராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம்.. மிரட்டியதா எடப்பாடி தரப்பு? : ஓபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் பரபரப்பு


அதில், "அடுத்த வாரம், ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் வீட்டு உபயோக பொருள்களை உடனடியாக விற்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும், "அவசர அவசரமாக எடுத்ததால் புகைப்படங்கள் அழகாக இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.




இந்த புகைப்படங்கள் மிகவும் மங்கலாக உள்ளன. புகைப்படத்தில் சமையலறை தெளிவாக கூட தெரியவில்லை. குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, அலமாரி, நாற்காலி, மேஜை ஆகிய பொருள்களின் அனைத்து புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துமே மங்களாக உள்ளன.




இதை கலாய்த்த சமூக வலைதள பயனாளி ஒருவர், "சூறாவளியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களா? என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் ஒருவர், "பூகம்பத்தின்போது, புகைப்படங்களை எடுக்காமல் உங்களால் இருக்க முடியாதா? என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: அதிமுக-வை அழிக்க நினைத்தால், அழிந்துபோவார்கள் என செல்லூர் ராஜூ பேச்சு


இன்னொரு பயனாளி ஒருவர், "உண்மையாகவே மிக அவசரமாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள்" என பதிவிட்டுள்ளார். 


"நீங்கள் புதிய வேலையை நினைத்து உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் கொஞ்சம் அமைதியாக இருங்கள். ஒவ்வொரு படத்தையும் பார்க்க எனக்கு மணிநேரம் தேவை" என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.


இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண