டி.டி.வி. தினகரனோடு ஓ. பன்னீர்செல்வதிற்கு ரகசிய உறவு இருப்பதாகவும், அவரது குடும்பத்தின் நலனில் மட்டும் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை கே.கே. நகரில் உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில், வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. அதிமுக கட்சிக்கு பாதுகாவலராகவும், வலுவான தலைமையாகவும் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.” என்று தெரிவித்தார்.