பஞ்சாபில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டு தேர்தல் முடிவுகளில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குர்மாயில் சிங், சிரோமணி அகாலி தள கட்சி வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் மானிடம் 5,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  


சங்குரூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவிய நிலையில், 5,800 வாக்குகள் வித்தியாசத்தில் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றிபெற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிம்ரஞ்சித் சிங், 77, சிரோமணி அகாலி தள (அமிர்தசரஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். இதற்கும் சிரோமணி அகாலி தள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.


இதையும் படிக்க: ஆதரவு தராவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம்.. மிரட்டியதா எடப்பாடி தரப்பு? : ஓபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் பரபரப்பு


காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் மூன்றாவது இடத்தையும் பாஜக வேட்பாளர் கேவால் தில்லான் நான்காவது இடத்தையும் அகாலி தள வேட்பாளர் கமல்தீப் கவுர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் களம் கண்டனர். 


கடந்த 2019ஆம் ஆண்டு, சங்குரூரில் நடைபெற்ற பொது தேர்தலில் 72.44 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இந்த இடைத்தேர்தலில் 45.30 வாக்குகள் மட்டுமே பதிவாகின. மக்களவை உறுப்பினராக பதவி வகித்த பகவந்த் மான் பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.


தற்போது, பஞ்சாப் முதலமைச்சராக உள்ள பகவந்த் மான், 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சங்குரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், தற்போது மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.


ஆம் ஆத்மியின் கோட்டையாக கருதப்படும் சங்குரூர் மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஒன்பது சட்டப்பேரவை தொகுதிகளையும் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண