Mahua Moitra: 'கேவலமான கேள்விகள் கேட்கிறார்கள்' - மக்களவை நெறிமுறைக் குழுவை விளாசித் தள்ளிய மஹூவா மொய்த்ரா!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா பணம் பெற்றுக் கொண்டு கேள்வி எழுப்பியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று மக்களவை நெறிமுறை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Continues below advertisement

நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்வது திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மககளவைத் தொகுதியில் எம்.பி. ஆவார்.

Continues below advertisement

ஆஜரான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.:

இந்த நிலையில், இவர் மக்களவையில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எதிராக எழுப்பிய கேள்விகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த கேள்விகள் இவருக்கு சமூக வலைதளங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி தந்தது.

இந்த நிலையில், மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக மஹூவா மொய்த்ரா மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக பிரபல தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு பெரும் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மக்களவை நெறிமுறை குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

கேவலமான கேள்விகள்:

கடந்த 31-ந் தேதி ஆஜராக முடியாது என்ற மஹூவா மொய்த்ரா இன்று டெல்லியில் மக்களவை நெறிமுறைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆஜரான பின்பு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது, “ மக்களவை நெறிமுறைக் குழு தனிப்பட்ட மற்றும் நெறிமுறையற்ற கேள்விகளை கேட்டனர். இது என்ன மாதரியான கூட்டம்? எல்லாவிதமான கேவலமான கேள்விகளையும் கேட்கிறார்கள். உங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது என்றார்கள். என் கண்ணில் கண்ணீரை பார்க்கிறீர்களா?" என்றார்.

மேலும், மக்களவை நெறிமுறைக் குழு கூட்டத்தில் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் நட்புரீதியில் கடவுச்சொல்லை பகிர்ந்து கொண்டதாகவும், தான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் தன்னுடையது என்றும், தான் இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் பதிலளித்தார்.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.விற்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. முன்னதாக,  தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மஹூவா மொய்த்ரா தன்னிடம் பணம் பெற்றது மட்டுமின்றி, அவருடைய மக்களவைக்கான மின்னஞ்சல் ஐ.டி. மற்றும் கடவுச்சொல்லையும் தனக்கு அளித்ததாக குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து எம்.பி. மஹூவா மொய்த்ரா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் படிக்க: Arvind Kejriwal: கைது செய்யப்படுகிறாரா முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்? இந்தியக் கூட்டணியை ஒழிக்க சதி என குற்றச்சாட்டு..

மேலும் படிக்க: Rahul Gandhi: ”தெலங்கானாவில் பிஆர்எஸ் - பாஜக கூட்டணி, ஒரு லட்சம் கோடி கொள்ளை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Continues below advertisement