புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ முக்தா திலக், மாநிலங்களவை தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மருத்துவ அவசர ஊர்தியில் சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வெளியான விடியோவில், அவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்ததும் வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து செல்வதும் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
வாக்களிக்கும்போது, அவருடன் அவருடைய கணவர் ஷைலேஷ் ஸ்ரீகாந்த் திலக் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்திருந்தது. புனேவில் உள்ள கஸ்பா சட்டப்பேரவை தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
வாக்கு மையத்திற்கு அழைத்து செல்லும்போது அவரின் கையில் கட்டு போட்டிருந்ததை விடியோவில் காணலாம். வாக்கு பதிவு மையத்தின் படிக்கட்டுகளில் இருந்து மேலே அழைத்து செல்ல முடியாமல் அவர்கள் தொடக்கத்தில் தவித்தனர்.
இதையும் படிக்க: ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!
மாநிலங்களவையில் காலியாகவுள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை மாதம், குடியரசு தலைவர் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க இரு தரப்பினரும் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர் அரசியல்வாதிகள்.
இதையும் படிக்க: ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளதால் ஆளும் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. கைதாகியுள்ள அவர்களின் எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க பிணை மறுக்கபட்டுள்ளது.
கடந்த 1990க்கு பிறகு, 100 மாநிலங்களவை உறுப்பினர்கள் பெற்ற முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இந்த மாநிலங்களவை தேர்தல் அவர்களுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்