மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது சாஹர் மாநிலம். இங்குளள மஞ்குவா கிராமத்தில் உள்ள கிணற்றில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்டு விசாரித்தபோது அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி ( அவருக்கு வயது 21) என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர் வயல்வெளிக்கு சென்றபோது அவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார் என்றும், பின்னர் பரிதாபமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில், ஜோதியின் இறுதிச்சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக கிராமத்தினரும், வெளியூர்களில் உள்ள உறவினர்களும் வந்துள்ளனர். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜோதியின் உறவுக்கார இளைஞர் கரண் என்பவர் வந்துள்ளார். அவர் ஜோதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 430 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்திலே வந்துள்ளார்.
ஜோதியின் சடலத்திற்கு இறுதிச்சடங்கள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, அவரது உடலை அந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். கரணும் அங்கு வந்துள்ளார். அங்கு இடுகாட்டில் ஜோதியின் உடலுக்கு எரியூட்டப்பட்டது. அப்போது, அங்கே சோகத்துடன் நின்று கொண்டிருந்த கரண் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் எரிந்து கொண்டிருந்த ஜோதியின் சிதையில் குதித்தார்.
மேலும் படிக்க : போதை பொருள் கடத்தல் வேனை கடத்திய கும்பல்; லாட்ஜில் இருந்து எஸ்கேப்பான டிரைவர் - நடந்தது என்ன..?
மேலும் படிக்க : Watch Video: படுக்கை நிறைய ரூ.500 ரூ.2000 நோட்டுகள்... கட்டுக்கட்டாய் கட்டிலில் அடுக்கும் யார் இந்த சுஷில் குண்டு?
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த பொதுமக்கள் கரணை உடனடியாக மீட்டனர். கரண் படுகாயம் அடைந்திருந்ததால் அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கரணுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் மரணத்தால் ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த கிராமம், அந்த பெண்ணின் சிதையில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் பெருத்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இளம்பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இளம்பெண்ணின் மரணத்திற்கும், இளைஞரின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Crime : துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்ணின் உடல்.. ஆசிட் ஊற்றி, கரும்புத்தோட்டத்தில் புதைத்த கொடூரன் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்