உத்திர பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயது இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வீசிச் சென்ற கொலை பாதகத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, கரும்புத்தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ம் தேதி முதலே காணமல் போன பெண்ணைப் பற்றி காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் பெண்ணைத் தேடி வந்தனர் காவல் துறையினர். கிராமத்திற்கு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அது ஒரு 18 முதல் 20 வயதினை உடைய இளம் பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த அந்த பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக ஏசிட் ஊற்றி அடையாளங்களை அழிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
குற்றவாளி கைது
பின்னர் காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோரினை அழைத்து, பெண்ணின் உடலை அடையாளம் கண்ட காவல் துறையினர். பெண்ணின் செருப்பு மற்றும் ஆடையினை வைத்து கொலை செய்யப்பட்டிருப்பது புகாரளித்தவரின் 18 வயது மகள் என்பது உறுதியானது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரித்த காவல் துறையினர், பெண்ணின் பெற்றோரின் புகாரின் பெயரில் சந்தோஷ் வர்மா என்ற 20 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.
பாஜக ஆட்சி
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இப்படியான குற்றச் செயல்கள் நடந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்