மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கு தமிழக அரசு கொண்டு வந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை விண்ணப் படிவங்கள் கடந்த மாதம் முதலே பெறப்பற்று வருகின்றன.  இதில் M.Sc., Bio Tech படிப்பிற்கான விண்ணப்பப் படிவத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.


69% இட ஒதுக்கீடு






இதனை அறிந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தமிழக அரசின் 69% இடஒதுகீட்டு முறை தான் பின்பற்றப்படவேண்டும் என பல்கலைக் கழகத்தின் கவனத்திற்கு கடிதம் வாயிலாக  கொண்டு சென்றார். 


இதையடுத்து மத்திய அரசின் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது எனவும், தமிழ்நாடு அரசு நியமித்துள்ள 69% இடஒதுக்கீடு  முறையே பின்பற்றப்படும் எனவும் பல்கழைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு முறையை உறுதிப்படுத்தி இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.


இதுகுறித்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பதிவில் உறுதி படுத்தியுள்ளார். அந்த ட்விட்டில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டித்தும் அதை மாற்றி 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தோம்.


தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு முறையை உறுதிப்படுத்தி இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது” இவ்வாறு தனது டிவிட்டரில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


இதானால், ஏற்கனவே  பெறப்பட்ட விண்ணப்படிவங்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வி இதுவரை விண்ணப்பங்களை அனுப்பியவர்களிடம் எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண