கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை சகோதரிகள் பிறந்துள்ளனர். இருவரும் சிறு வயது முதலே இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர். 


இந்தநிலையில், இருவரும் பிரியாமல் வளர்ந்து ஒரு கட்டத்தில் திருமண வயதை எட்டியபோது, மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து   ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை சகோதரிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி, ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை  கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்தியுள்ளனர். 


மேலும் படிக்க : Coonoor Chopper Crash | சௌர்யா சக்ரா விருதிலிருந்து ககன்யான் திட்டம்வரை... யார் இந்த கேப்டன் வருண் சிங்?


திருமண வாழ்க்கை சிறப்பாக சென்ற சிறிது நாட்களில் கர்ப்பம் தரித்த இருவரும், தாங்கள் பிறந்த மருத்துவமனையில் குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர்.  கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே  நாள் மாலை 6.45 மணிக்கு ஸ்ரீபிரியாவை தொடர்ந்து ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்ததும், அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே ரத்த வகையான 'ஓ' பாசிட்டிவ் என்பது குறிப்பிடத்தக்கது. 


Celebrity Died In Helicopter Crash | முன்னாள் பிரதமர் மகன் முதல் தலைமை தளபதி வரை.. எமனாக வந்த ஹெலிகாப்டர் பயணங்கள்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Chopper Crash: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்: டிஎன்ஏ சோதனைக்கு தயாராகும் மருத்துவக் குழு!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


Bipin Rawat Demise: ‛மென்மையான நட்பு... மேன்மையான எண்ணம்..’ ராவத்தின் நெருங்கிய நண்பர் உருக்கம்!