மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும் கணவன் மனரீதியாக பெண்ணை கொடுமை செய்வதற்கு சமம் என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கவர்ச்சியாக இல்லை எனக் கேலி


கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், திருமணம் நடைபெற்ற 2009ஆம் ஆண்டே விவாகரத்து கோரி மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.


அதில், ”திருமணம் ஆனது முதலே என் கணவர் நான் கவர்ச்சியாக இல்லை எனக் கூறி என்னை கேலி செய்வார். மற்ற பெண்களைப் போல நான் இல்லை என்றும், அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் நான் இல்லை என்றும் கூறி அவமானப்படுத்துவார்.


நான் கவர்ச்சியாக இல்லை என்ற காரணத்தால் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து வந்தார். ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோதிலும் எங்களுக்குள் மன ரீதியான பந்தம் உறுதியாக ஏற்படவில்லை. எங்கள் திருமண உறவு முழுமையற்று இருப்பதால் விவாகரத்து வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.


மேலும் படிக்க: Karnataka: திப்பு சுல்தான், சாவர்க்கர் போஸ்டர்கள் வைப்பதில் மோதல்... ஒருவருக்கு கத்திக்குத்து... கர்நாடகாவில் 144 தடை உத்தரவு!


‘இவையும் மனரீதியான கொடுமைதான்’


இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின் இத்தம்பதிக்கு முன்னதாக விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், தனது திருமணத்தைக் கலைத்த குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெண்ணின் முன்னாள் கணவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு முன்னதாக நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தொடர்ச்சியான கேலி செய்வது, தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனைவி இல்லை என்று தொடர்ச்சியாக சொல்வது, மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது போன்றவை மன ரீதியாக அவரைக் கொடுமை செய்வதற்கு சமம்.


மனைவி உடல் ரீதியாக கவர்ச்சியாக இல்லாததால் அவருடன் கணவர் உடலுறவில் ஈடுபடவில்லை எனும் குற்றச்சாட்டே மற்றொரு வழக்குக்கு வழிவகுக்கிறது.


இவற்றை அந்தப் பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கு இடையே திருமண உறவில் எந்த நெருக்கமான, உணர்வுப்பூர்வமான பந்தமும் உருவாகியதாகத் தெரியவில்லை" என்று கூறி கணவரின் மேல்முறையீட்டு மனுவை  தள்ளுபடி செய்து, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.




மேலும் படிக்க: Suriya Emotional Speech: ஒரு பெண் இங்க ஜெயிக்கறது கஷ்டம்... என் தங்கச்சிங்க என்ன சொன்னாங்கனா... விருமன் சக்சஸ் மீட்டில் சூர்யா நெகிழ்ச்சி!


Science: பூமியில் எப்படி தண்ணீர் தோன்றியது... சிறு கோளில் இருந்து எடுத்துவரப்பட்ட குப்பைகளில் ஆராய்ச்சி... வெளியான ஆச்சர்யத் தகவல்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண